ரஜினியின் 100 படத்தில் இருந்து வெளியான அரிதான புகைப்படம், ரஜினி எப்படி உள்ளார் பாருங்க..!
சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து அதிக வசூல் புரிந்து வருகிறது.
மேலும் இவர் இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார், இப்படத்தில் பணிபுரிந்து வந்த ஒரு சிலருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டதால், இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து இவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஹைதெராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். பின்னர் மருத்துவர்களின் அறிவுரையின் படி மீண்டும் வீடு திரும்பினார் ரஜினி.
இந்நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1985 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஸ்ரீ ராகவேந்திரா, இப்படம் ரஜினி நடிப்பில் வெளியான 100 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்படத்தில் இருந்து பலரும் பார்த்திராத அரிதான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..