தமிழ் முதல் ஹிந்தி வரை குவியும் பட வாய்ப்புகள் - சம்பளத்தை ஏற்றிய நடிகை ராஷி கண்ணா
அதர்வா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படம் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகில்அறிமுகமானவர் ராஷி கண்ணா.
இதன்பின் அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்.
தற்போது நடிகை ராஷி கண்ணா, தமிழ் திரையுலகம் முதல் பாலிவுட் திரையுலகம் வரை பல படங்களில் நடித்து வருகிறார்.
ஆம் தமிழில் இவர் நடிப்பில் தற்போது, அரண்மனை 3, துக்ளக் தர்பார், மேதாவி, சைதான் கா பச்சா, சர்தார் போன்ற படங்கள் உருவாகின்றனர்.
அதேபோல் தெலுங்கில் பக்கா கமர்ஷியல், தேங்க் யூ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர மலையாளத்தில் பிரம்மம் எனும் படத்தில் நடிக்கிறார்.
மேலும் இந்தியில் உருவாகும் இரண்டு வெப் சீரிஸ் , இரண்டு படங்கள் என பிசியாக நடித்து வருகிறாராம்.
ஏராளமான பட வாய்ப்பு வருவதால், நடிகை ராஷி கண்ணா சம்பளத்தையும் உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.