ரகசிய திருமணம் செய்துகொண்ட நடிகை ராஷ்மி கவுதம்.. ஷாக்கான ரசிகர்கள்
தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ராஷ்மி கவுதம். இவர் தமிழில் சாந்தனு நடிப்பில் வெளிவந்த கண்டேன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும், தெலுங்கில் ஒளிபரப்பான சில நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்துகொன்டு ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார்.
இந்நிலையில், தொழில் அதிபர் ஒருவரை நடிகை ராஷ்மி கவுதம் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.
சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக புகைப்படங்கள் பகிர்ந்து வரும் ராஷ்மி கவுதம், தன்னுடைய திருமணம் குறித்து ஏன் இதுவரை எந்த ஒரு விஷயத்தையும் வெளியிடவில்லை என்று ரசிகர்கள் கேள்வி கேட்க துவங்கிவிட்டனர்.
இதனால், சிலர் நடிகை ராஷ்மி கவுதம் ரகசிய திருமணம் செய்துகொண்டாரா என்றும் கேட்டு வருகிறார்கள். விரைவில், இதுகுறித்து நடிகை ராஷ்மி கவுதம் என்ன கூறப்போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri
