இதெல்லாம் சாதாரணம்.. யாரும் உங்களை கட்டாயபடுத்தல: சர்ச்சைக்கு ராஷ்மிகா பதில்
நடிகை ராஷ்மிகா தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது ஹிந்தியிலும் டாப் ஹீரோயினாக வளர்ந்து இருக்கிறார். அவர் ரன்பீர் கபூர் ஜோடியாக நடித்து இருந்த அனிமல் படம் 2023 டிசம்பரில் வெளியாகி இருந்தது.
ஹீரோ கதாபாத்திரம் பற்றி பலரும் விமர்சனம் செய்து படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர், ஆனாலும் படம் 1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இதெல்லாம் சாதாரணம்: ராஷ்மிகா
அனிமல் படத்திற்கு எதிராக வரும் விமர்சனங்கள் பற்றி சமீபத்திய பேட்டியில் ராஷ்மிகா பேசி இருக்கிறார். "நான் இந்த படத்தை படமாக மட்டுமே பார்த்தேன். ஒரு ஹீரோ திரையில் சிகரெட் பிடித்தால், அவர் மற்றவர்களை சிகரெட் பிடிக்க தூண்டுகிறார் என்கிறார்கள். ஆனால் இன்றைய சமுதாயத்தில் மக்கள் புகைபிடிப்பது எல்லாம் சாதாரணம் தான்."
"நான் திரையில் புகைபிடிப்பது போல நடிக்க மாட்டேன். ஒரு படத்தை படமாக மட்டுமே பாருங்க. யாரும் படத்தை பார்க்க சொல்லி கட்டாயப்படுத்தவில்லை."
"ஒவ்வொருவருக்கு உள்ளும் ஒரு மோசமான நபர் இருப்பார். அதை அனிமல் பட இயக்குனர் வெளியில் காட்டிவிட்டார், அவ்வளவு தான்" என ராஷ்மிகா கூறி இருக்கிறார்.

தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri
