வாடகை கூட கட்ட முடியாது.. நடிகை ராஷ்மிகாவின் பெற்றோர் வறுமையில் பட்ட கஷ்டம்
நடிகை ராஷ்மிகா இந்திய சினிமாவில் டாப் ஹீரோயினாக தற்போது மாறி இருக்கிறார். தமிழ், தெலுங்கை தாண்டி தற்போது ஹிந்தியில் கலக்கி வருகிறார் அவர்.
சமீபத்தில் சல்மான் கான் ஜோடியாக அவர் சிக்கந்தர் படத்தில் நடித்து இருந்தார். அந்த படம் ரிலீஸ் ஆகி நல்ல வசூலும் பெற்று வருகிறது.
பெற்றோர் பட்ட கஷ்டம்
இந்நிலையில் ராஷ்மிகா சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் குழந்தை பருவத்தில் இருந்தபோது தனது பெற்றோர் வறுமையால் பட்ட கஷ்டம் பற்றி பேசி இருக்கிறார்.
இரண்டு மாதத்திற்கு ஒருமுறை வீடு மாற வேண்டி இருக்கும், வாடகை கூட கட்ட முடியாது, வாழ்வதற்கு ஒரு வீடு தேட அவர்கள் பட்ட கஷ்டம் எனக்கு நினைவிருக்கிறது.
எனக்கு ஒரு பொம்மை வாங்கி தர கூட காசு இருக்காது. அவர்கள் நிலைமையை புரிந்துகொண்டு நான் எதுவும் கேட்க மாட்டேன்.
அப்படி வளர்ந்ததனால் தான் பணத்தின் அருமை எனக்கு தெரிந்து இருக்கிறது. அதனால் தான் இப்போது பார்த்து பார்த்து செலவு செய்கிறேன் என ராஷ்மிகா கூறி இருக்கிறார்.

அமெரிக்காவின் வரி விதிப்பு... முதல் முறையாக ட்ரம்புக்கு எதிராக கருத்து தெரிவித்த எலோன் மஸ்க் News Lankasri

உலகின் எதிர்காலமே இதுதானாம்! தங்கத்தை விட முக்கியம்..நாடொன்றில் கொட்டிக்கிடக்கும் புதையல் News Lankasri
