8 வருஷமாக தங்கையை பார்க்கவில்லை! நடிகை ராஷ்மிகாவுக்கு இப்படி ஒரு நிலையா? என்ன நடந்தது
நடிகை ராஷ்மிகா இந்திய அளவில் முன்னணி ஹீரோயினாக தற்போது இருந்து வருகிறார். அவர் நடிக்கும் படங்கள் 1000 கோடிக்கும் மேல் வசூலிப்பது பற்றி பல ஹீரோக்களே ஆச்சர்யமாக பேசுவதையும் பார்க்க முடிகிறது.
ராஷ்மிகா கர்நாடகாவின் Coorg பகுதியை சேர்ந்தவர். தனது சமூகத்தில் இருந்து வந்த முதல் நடிகை நான் தான் என ராஷ்மிகா சமீபத்தில் பேசியது சர்ச்சை ஆனது.
தங்கையை பார்க்க முடியவில்லை
இந்நிலையில் ராஷ்மிகா தற்போது தனது தங்கை பற்றி பேசி இருக்கிறார். இருவருக்கும் 16 வயது வித்தியாசம் எனவும், தற்போது தங்கைக்கு 13 வயது ஆகிறது எனவும் ராஷ்மிகா கூறி இருக்கிறார்.
"எனக்கு off வேண்டும் என நான் அழுவேன். என்னை விட 16 வயது குறைந்த தங்கை இருக்கிறாள். அவளுக்கு இப்போது 13 வயது ஆகிறது. கடந்த 8 வருடங்களாக, நான் நடிக்க தொடங்கியதில் இருந்து, அவளை என்னால் பார்க்க முடியவில்லை."
"அவள் என் உயரத்திற்கு வளர்ந்துவிட்டாள், ஆனால் அதை கூட என்னால் பார்க்க முடியவில்லை" என ராஷ்மிகா கூறி இருக்கிறார்.