ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிப்பீர்கள் - ரசிகரின் கேள்விக்கு நடிகை ராஷ்மிகாவின் பதிலடி
தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.
சமீபத்தில் கார்த்தியின் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழிலும் கதாநாயகியாக அறிமுகமாகிவிட்டார்.
இவருக்கு தென்னிந்திய மாநிலங்களில் அதிக அளவிலான இளம் ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா ரசிகர்களிடம் அடிக்கடி கலந்துரையாடுவார்.
அந்த வகையில் சமீபத்தில் கலந்துரையாடிய அவர், ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு தொடர்ச்சியாக பதிலளித்து வந்தார்.
குறிப்பாக ரசிகர் ஒருவர் நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிப்பீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ராஷ்மிகா, “நான் சிகரெட் பிடித்ததே இல்லை. அதேபோல் சிகரெட் பிடிப்பவர்கள் பக்கமும் செல்ல மாட்டேன்” என்று கூறியுள்ளார்.

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
