தளபதி 66 ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விஷயம் ! கதாநாயகி ராஷ்மிகா வெளியிட்ட பதிவு..

By Jeeva May 13, 2022 09:10 AM GMT
Report

நட்சத்திர பட்டாளமே நடிக்கும் தளபதி 66 

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் அவரின் 66 திரைப்படமாக உருவாகி வரும் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் விஜய்யுடன் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள், அதன்படி சமீபத்தில் கூட இப்படத்தில் நடிக்கும் பெரிய நட்சத்திரங்கள் பட்டியலை தொடர்ந்து வெளியிட்டு வந்தனர்.

மேலும் இப்படத்தின் இசையமைப்பாளர் தமன் கூட சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில் தளபதி 66 திரைப்படம் ஒரு பக்காவான குடும்ப திரைப்படமாக இருக்கும் என பேசியிருந்தார்.

ராஷ்மிகா வெளியிட்ட பதிவு 

இந்நிலையில் தற்போது இப்படத்தின் கதாநாயகி ராஷ்மிகா தனது தினசரி நாள் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் தளபதி 66 ஷூட்டிங் குறித்து பதிவிட்டு இருக்கிறார்.

அவர் பதிவிட்டுள்ளதில் "நான் ரெடி ஆன பிறகு அழைப்பு வந்தவுடன் செட்டிற்கு சென்றுவிடுவேன். அங்கு விஜய் சார், வம்சி சார், யோகி பாபு சார் மற்றும் படக்குழுவை சந்தித்தேன்.

அவர்களுடன் ரொம்ப நேரத்தை கழிப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும்" என பதிவிட்டுள்ளார். தளபதி 66 குறித்து ராஷ்மிகா சொன்ன விஷயம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. 

தளபதி 66 ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விஷயம் ! கதாநாயகி ராஷ்மிகா வெளியிட்ட பதிவு.. | Rashmika About Thalapathy 66 Shooting Spot

தளபதி விஜய்யின் பீஸ்ட் வெற்றியா? தோல்வியா? உண்மையை முதல் முறையாக கூறிய உதயநிதி ஸ்டாலின்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US