புஷ்பா 2வில் அந்த பாடல் படப்பிடிப்பின் போது சங்கடமாக இருந்தது... ஆனால், ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக்
புஷ்பா 2
சுகுமார் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 5ம் தேதி அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படம் வெளியாகி இருந்தது.
தமிழ் மட்டுமின்றி, அனைத்து மொழிகளிலும் புஷ்பா 2 படம் வெளியாக வசூல் மழை பொழிந்து வருகிறது. இந்த படம் ரூ. 1600 கோடி வரை வசூல் சாதனை படைத்துள்ளது, இந்தியாவில் மட்டுமே ரூ. 1029 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம்.
முதல் பாகத்தில் சமந்தா ஆடிய நடனம் ஹிட்டடிக்க 2ம் பாகத்தில் அல்லு அர்ஜுன்-ராஷ்மிகா ஆடிய பீலிங்ஸ் பாடல் ரசிகர்களிடம் செம ஹிட்டடித்து வருகிறது.
ராஷ்மிகா
இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா, ஒரு பேட்டியில், புஷ்பா 2 படத்தில் இடம்பெற்ற பீலிங்ஸ் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஆனால் இந்த பாடலில் நடனம் ஆடும் போது தான் சங்கடமாக உணர்ந்ததாக ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.
பீலிங்ஸ் படத்தின் ஒத்திகை வீடியோவை பார்த்தபோது ஆச்சரியப்பட்டேன், அல்லு அர்ஜுனுடன் நடனம் ஆடியது மகிழ்ச்சி.
ஆனால் யாராவது தன்னைத் தூக்கினால் பயமாக இருக்கும் என்றும் இந்தப் பாடலில் அல்லு அர்ஜுன் தன்னைத் தூக்கி நடனமாடும் காட்சியில் ஆரம்பத்தில் சங்கடமாக உணர்ந்ததாகவும் கூறினார்.
அல்லு அர்ஜுன், சுகுமார் ஆகியோரை நம்பிய பிறகு அது அவ்வளவு சங்கடமாக தெரியவில்லை என்று ராஷ்மிகா கூறியுள்ளார்.
You May Like This Video