விஜய் தேவரகொண்டாவிடமிருந்து அனைத்தும் வேண்டும்.. ஓப்பனாக சொன்ன ராஷ்மிகா
ராஷ்மிகா மந்தனா
தென்னிந்தியாவை தாண்டி ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக மாறி இருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
இவர் தெலுங்கு ஹீரோ விஜய் தேவரகொண்டா (VD) உடன் காதலில் இருப்பதாக கூறப்பட்டு வரும் தகவல் அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்த செய்தியை இதுவரை இவர்கள் மறுக்கவும் இல்லை, ஒப்புக்கொள்ளவும் இல்லை.
தற்போது, ராஷ்மிகா, தனுஷ் ஜோடியாக குபேரா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 20 - ம் தேதி வெளியாக உள்ளது.

ராஷ்மிகா ஓபன்
இந்நிலையில், இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் ராஷ்மிகாவிடம், தனுஷ் மற்றும் நாகர்ஜூனாவிடம் இருந்து எந்த விஷயங்களை எடுத்துக்கொள்ள விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, நாகர்ஜூனாவின் வசீகரத்தையும் தனுஷின் நடிப்பு, இயக்கம், நடனம் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.
பின், விஜய் தேவரகொண்டாவிடம் இருந்து என்று கேள்வி வர, ' அனைத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். தற்போது, இவரின் இந்த பதில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
CSK சுட்டிக் குழந்தைக்கு கல்யாணம்! காதலியிடம் ப்ரொபோஸ் செய்த சாம் கரண்: வைரல் புகைப்படம் News Lankasri
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
Heart Attack Vs Cardiac Arrest: 24 மணி நேரத்துக்கு முன் தெரியும் அறிகுறிகள்- தவற விட்டுறாதீங்க Manithan