வாரிசு பட FDFS விஜய் எங்கு பார்க்கிறார்- ரகசியத்தை பற்றி கூறிய நடிகை ராஷ்மிகா
விஜய்யின் வாரிசு
விஜய்யின் வாரிசு திரைப்பட FDFS சில மணி நேரங்கள் முன்பு தொடங்கியிருக்கும், பல நாட்களாக இந்த நாளுக்காக தான் ரசிகர்கள் கொண்டாடி வந்தார்கள், படமும் ரிலீஸ் ஆகிவிட்டது.
ஆனால் நேற்றே வாரிசு படத்தின் ப்ரீமியர் ஷோ சென்னையில் சத்யம் திரையரங்கில் ஒளிபரப்பானது, இதில் படக்குழுவினர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு, ராஷ்மிகா, ஷ்யாம் என பலரும் கலந்து கொண்டனர்.
விஜய் எங்கே படம் பார்க்கிறார்
ப்ரீமியர் ஷோவிற்கு பிறகு படக்குழு பத்திரிக்கையாளரை சந்தித்துள்ளனர். அதில் நடிகை ராஷ்மிகாவிடம் விஜய் சீக்ரெட்டாக வாரிசு படத்தை எங்கே பார்க்கிறார் என கேள்வி கேட்டுள்ளனர்.
அதற்கு அவர், பொதுவாக எல்லா நடிகர்களும் அடையாளம் தெரியாத லுக்கில் திரையரங்கம் சென்று படம் பார்க்க விரும்புவார்கள், நானும் அப்படி சில படங்கள் பார்த்துள்ளளேன்.
ஆனால் விஜய் அவர்கள் எங்கே படத்தை பார்க்கிறார் என்பது எனக்கு சுத்தமாக தெரியாது, அது பெரிய சீக்ரெட் என பதில் கூறியுள்ளார்.