ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா நிச்சயதார்த்தம்.. எப்போது தெரியுமா?
நடிகை ராஷ்மிகாவுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தேறியவேண்டியது இல்லை.தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் அவர்.
சமீபத்தில் ரிலீஸ் ஆகி பெரிய ஹிட் ஆன அனிமல் படத்தின் மூலமாக ராஷ்மிகா ஹிந்தியிலும் ஒரு முக்கிய நடிகையாக மாறி இருக்கிறார்.
ராஷ்மிகா தெலுங்கு ஹீரோ விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருவதாக நீண்ட காலமாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அதை அவர்கள் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இருப்பினும் அவர்கள் ஜோடியாக வெளிநாட்டிற்கு ட்ரிப் சென்று வரும் ஸ்டில்களும் அடிக்கடி வைரல் ஆகின்றன.
நிச்சயதார்த்தம்
இந்நிலையில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் வரும் பிப்ரவரி மாதத்தில் திருமண நிச்சயதார்த்தம் செய்ய இருக்கிறார்கள் என தகவல் பரவி இருக்கிறது.
இருப்பினும் நிச்சயதார்த்த செய்தி பற்றி இருவரும் இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.