KGF ஹீரோவை விமர்சித்த நடிகை ரஷ்மிகா மந்தனா! கடும் எதிர்ப்பு தெரிவித்த ரசிகர்கள்..

KGF Yash Rashmika Mandanna Pushpa
By Jeeva Jan 29, 2022 04:30 PM GMT
Report

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ரஷ்மிகா மந்தனா.

இவரை நேஷனல் Crush என இந்தியா முழுவதிலும் உள்ள ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். அந்த அளவிற்கு ரஷ்மிகா பிரபலமாகியுள்ளார்.

சமீபத்தில் கூட ரஷ்மிகா கதாநாயகியாக நடித்திருந்த புஷ்பா திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கன்னட திரையுலகை சேர்ந்த ரஷ்மிகா Kirrik Party என்ற படத்தின் மூலம் கடந்த 2016 ஆம் ஆண்டு அறிமுகமானார். அவரின் திரைப்படங்கள் வெற்றியடைந்து கொண்டிருந்த போது 2017 ஆம் ஆண்டு KGF ஹீரோ யஷ் குறித்து பேசி விமர்சனத்திற்கு ஆளானார்.

ஆம், ரஷ்மிகா அப்போது கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் நடிகர் யஷ் தான் கன்னட திரையுலகின் Mr Showoff என பதிலளித்திருந்தார். இதனால் கொந்தளித்த அவரின் ரசிகர்கள் ரஷ்மிகா குறித்து இணையத்தில் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

பின்னர் ரஷ்மிகா சமூக வலைத்தளத்தில் மன்னிப்பு கேட்டு வருத்தம் தெரிவித்தது மட்டுமின்றி யஷ் குறித்து அவர் பேசிய நல்ல விஷயங்களை அவர்கள் ஒளிபரப்பவில்லை என்றும் யஷ் சார் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.

 

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US