800 கோடி வசூல் செய்த ராஷ்மிகாவின் சாவா படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா, இதோ
Chhaava
சத்ரபதி சிவாஜியின் மகனான ஷாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் சாவா (Chhaava). லக்ஷ்மன் உடேகர் இயக்கிய இப்படத்தில் விக்கி கௌஷல் ஹீரோவாக நடித்திருந்தார்.

மேலும் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க அக்ஷய் கன்னா வில்லனாக நடித்திருந்தார். பாலிவுட்டில் வெளிவந்த இப்படம் ரூ. 800 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
ஆனால், ஹிந்தி மொழியை தவிர்த்து வேறு எந்த மொழியிலும் இப்படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
OTT
திரையரங்கில் மாபெரும் அளவில் கொண்டாடப்பட்ட சாவா திரைப்படம் வருகிற 11ம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளிவரவுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளனர்.

திரையரங்கில் எப்படி வரவேற்பை பெற்றதோ, அதே போல் OTT-யிலும் இப்படத்திற்கு வரவேற்பு கிடைக்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri