திருமணம் முடிந்ததும் ராஷ்மிகா முதல் வேலையாக செய்திருக்கும் விஷயம்.. வைரல் ஆகும் வீடியோ
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் இந்திய அளவில் முன்னணி ஹீரோயினாக இருக்கும் ராஷ்மிகாவுக்கு கடந்த பிப்ரவரி 26ம் தேதி திருமணம் நடைபெற்றது.
உதய்பூரில் நடந்த திருமணத்தில் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்துகொண்ட நிலையில் வரும் மார்ச் 4ம் தேதி நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு சினிமா துறையினர் மற்றும் பிரபலங்கள் அழைக்கப்பட்டு இருக்கின்றனர்.
திருமணத்தை கொண்டாடும் விதமாக மக்களுக்கு நாடு முழுவதும் பல கோவில்களில் அன்னதானம் செய்ய போவதாக ராஷ்மிகா நேற்று அறிவித்து இருந்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில்..
இந்நிலையில் இன்று விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்து இருக்கின்றனர்.
அங்கு இருப்பவர்களுக்கு ஸ்வீட் பெட்டிகளை இருவரும் சேர்ந்து விநியோகம் செய்து இருக்கின்றனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
தென்பெண்ணை ஆற்றில் நச்சு நுரை விவகாரம் - இரு மாநில அரசுகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் முக்கிய உத்தரவு IBC Tamilnadu
நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri