புஷ்பா பட வெற்றியை தொடர்ந்து சம்பளத்தை உயர்த்திய நடிகை ரஷ்மிகா- எவ்வளவு கேட்கிறார் தெரியுமா?
தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா நடிக்க தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் புஷ்பா.
ஆந்திர பகுதியில் நடக்கும் செம்மர கடத்தல் பற்றிய கதை இப்படம், இதில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடித்திருந்தார்.
இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் முதல் பாக வெற்றியால் அதிரடியாக சம்பளத்தை ஏற்றியுள்ளார் நடிகை ரஷ்மிகா மந்தனா.
பல படங்களில் கமிட்டாகி வரும் ரஷ்மிகா ஒன்றில் அரை மணி நேரம் மட்டுமே நடிப்பதற்கு ரூ. 1 கோடி வரை சம்பளம் கேட்டுள்ளாராம். இதைக்கேட்டு தயாரிப்பாளர் அனைவருமே கொஞ்சம் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அரை மணி நேரத்திற்கே இவ்வளவு என்றால் முழு படம் நடித்தால் எவ்வளவு கேட்பாரோ என இப்போதே யோசிக்கிறார்களாம். சமீபத்தில் கூட ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்கிவந்த நடிகை பூஜா ஹெக்டே ரூ. 5 கோடி வரை சம்பளத்தை ஏற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.