புது பிஸ்னஸ் தொடங்கிய ராஷ்மிகா! என்ன தொழில் தெரியுமா
நடிகை ராஷ்மிகா தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் டாப் ஹீரோயினாக இருந்து வருகிறார். மிகப்பெரிய ரசிகர் கூட்டம் வைத்திருக்கும் அவரது சம்பளமும் படத்திற்கு படம் அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் அவர் நடிப்பில் வந்த குபேரா படத்திற்காக வெறும் 4 கோடி மட்டுமே சம்பளமாக பெற்றார். அதில் ஒப்பந்தம் ஆன போது அவரது சம்பளம் அந்த ரேஞ்சில் தான் இருந்தது. இதற்கிடையில் புஷ்பா 2, அனிமல் என ராஷ்மிகாவின் சம்பளம் பல மடங்கு உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
புது பிஸ்னஸ்
இந்நிலையில் ராஷ்மிகா புது பிஸ்னஸ் ஒன்றை தொடங்கி இருக்கிறார். அவர் Dear Diary என்ற பெயரில் Perfume பிராண்ட் ஒன்றை புதிதாக தொடங்கி இருக்கிறார்.
இது பற்றி ராஷ்மிகா அறிவிப்பு வெளியிட்டு இருக்கும் நிலையில் அவரது காதலர் விஜய் தேவரகொண்டாவும் வாழ்த்து கூறி பதிவிட்டுள்ளார்.