நடிகை ரஷ்மிகா மந்தனா முதன் முதலில் பார்த்த திரைப்படம் இதுதானாம்.. யாருடைய படம் தெரியுமா
தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.
சமீபத்தில் கார்த்தியின் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழிலும் கதாநாயகியாக அறிமுகமாகிவிட்டார்.
இவருக்கு தென்னிந்திய மாநிலங்களில் அதிக அளவிலான இளம் ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாகவும் இருப்பார் நடிகை ராஷ்மிகா.
சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தனது இன்ஸ்டாகிராமில் Followers எண்ணிக்கை, 20 மில்லியன் ஆக உயர்த்தி. புதிய சாதனையும் படைத்தார்.
இந்நிலையில், நடிகை ரஷ்மிகா மந்தனா, தான் திரையரங்கில் பார்த்த முதல் திரைப்படம் என்று தளபதி விஜய் மற்றும் த்ரிஷா நடித்த ’கில்லி’ என்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.