National Crush பட்டம் உதவுவதில்லை.. மனம் திறந்த ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா
இந்திய சினிமா கொண்டாடும் நாயகியாக National Crush என மக்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார். பின் தளபதி விஜய்யுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்திருந்தார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் புஷ்பா 2. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.

ராஷ்மிகா மந்தனா ஓபன்
இந்நிலையில், பேட்டி ஒன்றில் ராஷ்மிகா பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், "சினிமா துறையில் பட்டப் பெயர்கள் உதவுவதில்லை. அது மக்கள் நம் மீது வைத்த அன்பினால் கிடைப்பது.

அது வெறும் பெயர்கள் மட்டும் தான். நம் உழைப்பு தான் நல்ல இடத்தை மக்கள் மனதில் பெற்று கொடுக்கிறது. நான் 24 படங்களில் நடித்துள்ளேன்.
அதில், என்னை விட பல கதாநாயகிகள் அழகாக இருக்கிறார்கள். ஆனால், நான் என் பாதையில் செல்கிறேன். என் ரசிகர்களுக்காக நான் எதுவும் செய்ய தயாராக உள்ளேன்" என்று கூறியுள்ளார்.
பிரித்தானியாவை விட்டு வெளியேறிய 45,000 இந்திய மாணவர்கள்: எச்சரிக்கும் கல்வித்துறையினர் News Lankasri
18 வயதுக்கு மேற்பட்டோர் சேர்ந்து வாழலாம்; லிவ்-இன் உறவுக்குத் தடையில்லை - உயர்நீதிமன்றம் IBC Tamilnadu