நடிகை ராஷ்மிகாவை செல்ல பெயர் வைத்து அலைக்கும் அல்லு அர்ஜுன்.. அதுவும் எப்படி தெரியுமா
தெலுங்கில் வெளிவந்த கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.
இதன்முலம் தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் நடிக்கும் வாய்ப்பையும் இவர் பெற்றார்.
முக்கியமாக தமிழில் கார்த்தி நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.
மேலும் தற்போது அல்லு ஆர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா படத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்திற்கான ப்ரோமோஷன் வேளைகளில் ஹீரோயின்,ஹீரோயின் உட்பட அனைவரும் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், இந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் அல்லு அர்ஜுன், நடிகை ராஷ்மிகா குறித்து பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
அதில் " நடிகை ராஷ்மிகா தேசிய அளவில் ரசிகர்கள் மத்தியில் 'க்ரஷ்'-ஆகிவிட்டார். அதனால், நானும் அவரை ராஷ்மிகா என்று கூப்பிடாமல், க்ரஷ்மிகா என்று செல்லமாக கூப்பிட ஆரம்பித்துவிட்டேன்" என்று கூறியுள்ளார்.
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri