முதன்முறையாக அப்படியொரு கதைக்களத்தில் நடிக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா.. வெளிவந்த அப்டேட்
ராஷ்மிகா மந்தனா
கன்னட சினிமாவில் இருந்து அப்படியே தெலுங்கு பக்கம் சென்று பின் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் கலக்கி வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.
National Crushஆக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள இவரது நடிப்பில் கடைசியாக ஹிந்தியில் சாவா என்ற படம் வெளியாகி இருந்தது.
இதில் நடிகை ராஷ்மிகாவின் நடிப்பு ரசிகர்களால் பெரிய அளவில் பாராட்டப்பட்டது.
முதல்முறை
இதுவரை ஹாரர் படத்தில் நடிக்காத நடிகை ராஷ்மிகா தற்போது அந்த கதைக்களத்தையும் தேர்வு செய்துள்ளார்.
கதாநாயகியாக ராஷ்மிகா நடிக்க இப்படத்திற்கு தாமா என பெயரிடப்பட்டுள்ளது. முஞ்யா இயக்குனர் அதித்யா சர்போத்தர் இயக்கவுள்ள இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாநாயகனாக நடிக்கிறார்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ள இந்த படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக ஹாரர் படத்தில் நடிக்கும் ராஷ்மிகாவின் இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதத்திற்குள் முடிவடையும் என தகவல் வெளியாகியுள்ளது.

செயற்கை இதயத்துடன் வாழ்ந்து வரும் உலகின் முதல் மனிதர் யார் தெரியுமா? ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
