சம்பளத்தை உயர்த்திய ராஷ்மிகா! இத்தனை கோடியா.. ஷாக் ஆன தயாரிப்பாளர்கள்
ராஷ்மிகா மந்தனா தற்போது முன்னணியில் இருக்கும் ஹீரோயின். அவர் மிக அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை இல்லை என்றாலும், தற்போது அவர் சம்பளத்தை உயர்த்தி இருக்கும் செய்தி தயாரிப்பாளர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது.
ராஷ்மிகா
ராஷ்மிகா தற்போது விஜய் ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி ஹிந்தியில் Goodbye மற்றும் அனிமல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தற்போது மும்பையில் இருக்கும் அவர் தனது ஹிந்தி படங்களின் ஷூட்டிங் மற்றும் டப்பிங் பணிகளில் பிசியாக ஈடுபட்டு வருகிறார்.
அது மட்டுமின்றி அவர் புஷ்பா 2 படத்திலும் விரைவில் நடிக்க தொடங்க இருக்கிறார்.

சம்பளத்தை உயர்த்திய ராஷ்மிகா
ராஷ்மிகா இதற்குமுன்பு தான் நடித்த படங்களுக்கு ஒரு கோடி முதல் இரண்டு கோடி வரை சம்பளம் வாங்கி வந்தார். ஆனால் தற்போது தனக்கு ஹிந்தி பட வாய்ப்புகளும் அதிகமாக வருவதால் சம்பளத்தை அப்படியே உயர்த்தி இருக்கிறார்.
ஒரு படத்திற்கு தற்போது 4 கோடி ருபாய் சம்பளமாக அவர் கேட்கிறாராம். அடுத்து புஷ்பா படத்திற்கும் அதே தொகையை தான் சம்பளமாக ராஷ்மிகா பெற இருக்கிறார் என தெரிகிறது.

கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம்? மாப்பிள்ளை யார் தெரியுமா.. கசிந்த தகவல்
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri