பாலிவுட் படத்தில் ராஷ்மிகா! முன்னணி நடிகருக்கு ஜோடியாகிறார்

By Parthiban.A Apr 02, 2022 07:50 AM GMT
Report

நடிகை ராஷ்மிகா தற்போது தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது ஹிந்தியிலும் தடம் பதிக்க தொடங்கிவிட்டார். இன்று உகாதி ஸ்பெஷலாக அவர் நடிக்கும் பாலிவுட் படம் பற்றிய பெரிய அறிவிப்பு வந்திருக்கிறது.

அனிமல் படம்

அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங் ஆகிய படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிக்க உள்ள அனிமல் படத்தில் தான் ராஷ்மிகா ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தில் அணில் கபூர், பாபி தியோல் ஆகியோரும் முக்கிய ரோல்களில் நடிக்கின்றனர். இதில் ஹீரோயினாக பரினீதி சோப்ரா முதல் நடிக்க இருந்தார், அவர் வெளியேறிய நிலையில் தான் தற்போது ராஷ்மிகா ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

தளபதி66ல் நடிக்கிறாரா?

நடிகர் விஜய்யின் அடுத்த படமான தளபதி66ல் ராஷ்மிகா நடிப்பதாக ஆரம்பத்தில் தகவல் பரவி வந்தது. ஆனால் அவர் நடிக்கவில்லை என பின்னர் தகவல் வந்தது.

தற்போது அவர் பாலிவுட் படத்தில் ஒப்பந்தம் ஆகி இருப்பதால் அவர் விஜய் படத்தில் நடிக்கவில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 

பாலிவுட் படத்தில் ராஷ்மிகா! முன்னணி நடிகருக்கு ஜோடியாகிறார் | Rashmika Mandanna In Ranbir Kapoor S Animal

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US