புதிய கெட்டப்பில் ராஷ்மிகா மந்தனா.. ஆள் அடையாளமே தெரியவில்லை! புகைப்படத்தை பாருங்க
ராஷ்மிகா மந்தனா
பான் இந்தியன் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. அனிமல், புஷ்பா 2, சாவா என தொடர்ந்து ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த குபேரா படம் தமிழ்நாட்டை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் சூப்பர்ஹிட்டாகியுள்ளது. இதை தொடர்ந்து Girlfriend, Thama ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த இரண்டு திரைப்படங்களும் சோலோ ஹீரோயின் சப்ஜெக்ட் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் Thama திரைப்படத்தின் First லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்தது. இதில் வெறித்தனமான லுக்கில் ராஷ்மிகா மந்தனா இருந்தார்.
புதிய லுக்
ராஷ்மிகா மந்தனாவின் போட்டோஷூட் என்றால் ரசிகர்கள் மத்தியில் உடனடியாக வைரலாகும். இந்த நிலையில், பிரபல magazine-க்கு ராஷ்மிகா நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் ஒன்று ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
இந்த magazine cover போட்டோஷூட்டில் தனது கெட்டப்பை முழுமையாக மாற்றி, ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனா. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதோ அந்த புகைப்படம்..