வைரலான ராஷ்மிகாவின் மார்பிங் வீடியோ.. விசாரணையில் சிக்கிய 19 வயது நபர்
ராஷ்மிகா மந்தனா
தென்னிந்திய படங்களை தாண்டி பாலிவுட் படங்களிலும் கலக்கி வருபவர் ராஷ்மிகா மந்தனா.
சமீபத்தில் ஏ.ஐ.தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ராஷ்மிகா மந்தனாவை ஆபாசமாக மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
அதனை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் முதற்கொண்டு பல பிரபலங்கள் கண்டனம் தெரிவித்தனர்.
விசாரணை
இதைத்தொடர்ந்து டெல்லி காவல் துறை வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகிறது. அதில் 19 வயது நபர் கைது செய்து விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் அந்த நபர், அந்த மார்பிங் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து டவுன்லோட் செய்தபின்னரே, தனது பக்கத்தில் அப்லோட் செய்தேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.
தற்போது அந்த நபரின் கைப்பேசியை ஆராயும் பணியில் டெல்லி காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.