நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முழு சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா
நடிகை ராஷ்மிகா
கன்னட திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி, தெலுங்கு திரையுலகம் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.
இவர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். இதன்பின் கடந்த ஜனவரி மாதம் தளபதி விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்திலும் நடித்திருந்தார்.
இதுவரை தமிழில் இரு திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், முன்னணி நடிகைகளுக்கு கிடைக்கும் அதே வரவேற்பு ராஷ்மிகா மந்தனாவிற்கும் கிடைக்கிறது.
தென்னிந்தியாவையும் தாண்டி தற்போது பாலிவுட் வரை சென்றுள்ள ராஷ்மிகா தொடர்ந்து 3 படங்களை அங்கு கமிட் செய்துள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர்.
சொத்து மதிப்பு
இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் சொத்து மதிப்பு ரூ. 125 கோடிக்கும் மேல் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை, சென்சார் குழு உறுப்பினரும், திரைப்பட விமர்சகருமான உமைர் சந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதுமட்டுமின்றி Boy Friends குறித்தும் இதில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்துள்ளார்.
#RashmikaMandanna is the Richest South Indian Actress now. Her Annual Net Worth approximately “ 125 cr ” Plus. She has alot of A List Brands & Movies. She has alot of Rich ? Boyfriends also. pic.twitter.com/iZOijjlp6D
— Umair Sandhu (@UmairSandu) March 27, 2023
திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருக்கிறாரா பிக்பாஸ் பாவனி- அவரே கூறிய செய்தி