பாலிவுட் பக்கம் படவாய்ப்புகளை அள்ளும் நடிகை ராஷ்மிகா மந்தனா.. காரணம் இந்த படம் தானா
நடிகை ராஷ்மிகா மந்தனா
கீதா கோவிந்தம் எனும் ஒரே படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இதன்முலம் தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் நடிக்கும் வாய்ப்பையும் இவர் பெற்றார்.

தென்னிந்திய க்ரஷ் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா தமிழில் சுல்தான் படத்தின் மூலம் அருகமானார். கடந்த ஆண்டு வெளிவந்த புஷ்பா திரைப்படம், இவரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும்.
அடுத்தடுத்த பாலிவுட் பட வாய்ப்புகள்
இதன்முலம் வருன் தவானுடன் இணைந்து பாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதுமட்மின்றி சித்தார்த் மல்ஹோத்ரா உடன் மிஷன் மஜ்னு மற்றும் அமிதாப் பச்சனுடன் குட் பை படத்திலும் ரஷ்மிகா நடித்து வருகிறார் ராஷ்மிகா.

இதனை தொடர்ந்து தற்போது அர்ஜுன் ரெட்டி பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கும் அனிமல் படத்தில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா கமிட்டாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
சினேகன் மனைவிக்கு என்ன ஆச்சு.. புது ஹேர் ஸ்டைல் பார்த்து எல்லோரும் அதிர்ச்சி