திருமணம் எப்போது? ஓப்பனாக பேசிய ராஷ்மிகா! இப்படி ஒருவர் தான் வேணும்

Marriage Rashmika Mandanna Love
By Parthiban.A Feb 16, 2022 01:30 PM GMT
Report

நடிகை ராஷ்மிகா தற்போது புஷ்பா படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார். அவரது சாமே டான்ஸ் வீடியோ எவ்வளவு பெரிய ஹிட் என சொல்லி தெரியவேண்டியதில்லை. இன்ஸ்டாக்ராமை திறந்தால் அந்த பாட்டுக்கு தான் ரீல்ஸ் அதிகம் இருந்தது.

இதற்கு பிறகு தற்போது ராஷ்மிகா கைவசம் இரண்டு ஹிந்தி படங்கள் வைத்து இருக்கிறார். சித்தார்த் மல்ஹோத்ரா உடன் மிஷன் மஜ்னு, அமிதாப் உடன் குட்பை உள்ளிட்ட ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

ராஷ்மிகா தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாக சமீப காலமாக அதிகம் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர்கள் அதை மறுத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ராஷ்மிகா அளித்திருக்கும் பேட்டியில் தனக்கு எப்படிப்பட்ட ஒருவருடன் திருமணம் நடக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

"என்னை பொறுத்தவரை.. காதல் என்றால் ஒருவருக்கொருவர் மரியாதை, நேரம், மற்றும் பாதுகாப்பாக உணர வேண்டும். காதல் என்றால் என்ன என சொல்ல முடியாது, அது பீலிங்ஸ் சம்பந்தப்பட்டது. அது இரண்டு பேரிடம் இருந்தும் வர வேண்டும், ஒருவரிடம் மட்டும் அல்ல" என தெரிவித்து உள்ளார் அவர்.

மேலும் திருமணம் பற்றி கேட்டதற்கு "அதை பற்றி நான் எதுவும் நினைக்கவில்லை, தற்போது அதை பற்றி யோசிக்கும் அளவுக்கு எனக்கு வயதாகவில்லை. நான் என்னை comfortable ஆக்கும் நபர் உடன் இருக்கவே விரும்புகிறேன்" என தெரிவித்து உள்ளார்.

 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US