தேர்தலில் யாருக்கு ஆதரவு.. மறைமுகமாக ராஷ்மிகா பதில்! எந்த கட்சி பாருங்க
நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல சினிமா துறைகளில் பாப்புலர் ஆன நடிகையாக இருந்து வருகிறார். அவர் ஹிந்தியில் நடித்த அனிமல் படம் பெரிய ஹிட் ஆகி 900 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.
தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் சினிமா பிரபலங்கள் பலரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இருப்பினும் ஒரு சில நடிகர்கள் மட்டுமே தாங்கள் எந்த கட்சிக்கு ஆதரவு என வெளிப்படையாக பேசுகின்றனர்.

மோடியை புகழ்ந்த ராஷ்மிகா
இந்நிலையில் நடிகை ராஷ்மிகா அளித்த ஒரு பேட்டியில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியை பாராட்டி பேசி இருக்கிறார்.
"கடந்த 10 ஆண்டுகளில் நாடு அபாரமான வளர்ச்சி அடைந்து இருக்கிறது. நாட்டின் உட்கட்டமைப்பு, திட்டமிடல், சாலைகள் என எல்லாமே, it is just brilliant " என ராஷ்மிகா கூறி இருக்கிறார்.
இதில் இருந்தே ராஷ்மிகா எந்த கட்சிக்கு ஆதரவு என்பது தெளிவாக தெரிகிறது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
.
9 சிக்ஸர்களுடன் 49 பந்துகளில் 100 ஓட்டங்கள்! ஷபாலி வெர்மாவின் மிரட்டலில்..இந்தியா அபார வெற்றி News Lankasri
34 பில்லியன் சொத்து இருந்தும் மகளின் ஸ்டார்ட்அப்புக்கு நிதியளிக்க மறுத்த மெலிண்டா கேட்ஸ் News Lankasri