சென்சேஷன் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. இத்தனை கோடியா
தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.
சமீபத்தில் கார்த்தியின் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழிலும் கதாநாயகியாக அறிமுகமாகிவிட்டார்.
மேலும் தற்போது அல்லு அர்ஜுன் மற்றும் பகத் பாசில் நடித்து வரும் புஷ்பா படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இவருடைய லுக் வெளியானது.
சமீபகாலாமாக முன்னணி திரையுலக நட்சத்திரங்களின் சொத்து மதிப்பு மற்றும் சம்பள விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.
அந்த வரிசையில் தற்போது நடிகை ராஷ்மிகாவின் சொத்து மதிப்பு குறித்தும் விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி, இதுவரை நடிகை ராஷ்மிகாவின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 29 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது.