எனக்கும் என் தங்கைக்கும் 16 வருடங்கள் இடைவெளி.. மனம் திறந்து பேசிய ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா
நேஷ்னல் க்ரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னட திரையுலகம் மூலம் அறிமுகமானார்.
இதன்பின் தெலுங்கில் எண்ட்ரி கொடுத்த இவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. பாலிவுட் திரையுலகிலும் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன.
அனிமல், புஷ்பா 2, சாவா என தொடர்ந்து மாபெரும் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இதில் புஷ்பா 2 படம் உலகளவில் ரூ. 1800 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
ராஷ்மிகா மந்தனாவின் தங்கை
இந்த நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா தனது தங்கை ஷிமன் மந்தனா குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதில் "எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா. எங்க ரெண்டு பேருக்கும் இடையே 16 வருடங்கள் இடைவெளி இருக்கு. ஒரு சமயம் வரை நான் தான் அவளுடைய அக்கா என்று சொல்லாமலே வளர்த்தோம். இது உன்னுடைய வாழ்க்கை. எங்களை அதில் ஈடுபடுத்தாதே என்று என்னுடைய பெற்றோர்கள் அடிக்கடி சொல்வார்கள். என்னுடைய தங்கை நினைத்தால் அவளுக்கு இப்போது எதுவேனாலும் கிடைக்கும்.
ஆனால், அதுபோல அவளுக்கு எல்லாமே ஈசியாக கிடைக்க கூடாது என்று நான் நினைப்பேன். ஏனென்றால், நான் இந்த நிலைமைக்கு வளர்ந்ததற்கு காரணம், நான் அது போல் வளர்க்கப்பட்டேன். அவளும் அப்படி தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், அவளுக்கு குறிப்பிட்ட வயது ஆனதும் கண்டிப்பாக நான் நிறைய பாதுகாப்பு மற்றும் ஆதரவு கொடுப்பேன்" என கூறியுள்ளார்.