ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள The GirlFriend படம் செய்துள்ள மொத்த வசூல்... எத்தனை கோடி?
தி கேர்ள் ப்ரண்ட்
படங்கள் நடிக்க தொடங்கிய வேகத்தில் National Crushஆக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான் ராஷ்மிகா மந்தனா.
தொடர்ந்து வெற்றிப் படங்கள் நடித்து வருபவர் நடிப்பில் அண்மையில் The Girlfriend என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. ராஷ்மிகாவுடன் ரோகிணி, தீக்ஷித் ஷெட்டி, அனு இம்மானுவேல் உள்பட பலர் நடிக்க இப்படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ளார்.
முதலில் இப்படத்தில் சமந்தா தான் நடிப்பதாக இருந்தது, அவர் விலக ராஷ்மிகா நடித்துள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ்
கடந்த நவம்பர் 7ம் தேதி வெளியான இப்படம் ஆணாதிக்க சமூகம் ஒரு பெண்ணின் மனவோட்டத்தை எப்படி நெருக்கடிக்குள்ளாக்குகிறது, அதிலிருந்து மீண்டு மேலே வருவதற்குக் கல்வியே எப்படி ஆயுதமாக மாறுகிறது என்பதை நோக்கிய படமாக உள்ளது.
படம் வெளியான 5 நாள் முடிவில் மொத்தமாக ரூ. 20.4 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம். விமர்சனங்கள் நன்றாக வர படத்தின் வசூலும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
