கோடிகளில் சம்பளம் வாங்கிட்டு இப்படியா பண்றது.. வீடியோ பார்த்து ராஷ்மிகாவை மோசமாக ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
ராஷ்மிகா மந்தனா இதுவரை தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு மட்டும் தான் அதிகம் பிடித்தவராக இருந்தார். ஆனால் புஷ்பா படத்திற்கு பிறகு இந்தியா முழுவதும் பாப்புலர் ஆகி விட்டார். புஷ்பா படத்தில் வரும் சாமே சாமே பாட்டுக்கு அவரது டான்ஸ் பெரிய லெவல் ஹிட்.
சமீபத்தில் ராஷ்மிகா மும்பைக்கு சென்று இருந்தார். அங்கு அவர் இயக்குனர் கரண் ஜோகர் அலுவலகத்திற்கு சென்று இருந்தார். அதன் பின் ஹோட்டல் ஒன்றில் இருந்து ராஷ்மிகா வெளியில் வரும் வீடியோ வெளியாகி இருக்கிறது.
அப்போது ஒரு சின்ன பெண் குழந்தை வந்து தனக்கு பசிக்கிறது என எதாவது கேட்கிறார். ஆனால் ராஷ்மிகா தன்னிடம் எதுவும் இல்லை என சொல்லி காரில் ஏறி கிளம்பி இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை மோசமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
அழகு இருக்கு, ஆனால் நல்ல மனசு இல்லையே, கோடிகளில் சம்பளம் வாங்கி கொண்டு இப்படி நடந்துகொள்கிறாரே என ட்ரோல் செய்து வருகின்றனர்.
ராஷ்மிகாவுக்கு அழகு இருக்கிறது...ஆனால் நல்ல மனது இல்லை
— Film Food & Travel (@FilmFoodTravel) January 28, 2022
ராஷ்மிகா மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து வெளியே வந்தார். அப்போது ஒரு சிறுமி அவரிடம் எதாவது கொடுங்கள் என்று கேட்கிறாள். அந்த குழந்தை ராஷ்மிகாவை நோக்கி கையை நீட்டி பசிக்கிறது சாப்பிட வேண்டும் என்று கேட்டிருக்கிறார் pic.twitter.com/glrcEBs9qZ