வாரிசு பட படப்பிடிப்பு தளத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா.. அவரே வெளியிட்ட வீடியோ
ராஷ்மிகா மந்தனா
தமிழ் சினிமாவில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் படத்தின் மூலம் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இப்படத்தை தொடர்ந்து தமிழில் தற்போது உருவாகும் வாரிசு படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.
இப்படத்தின் பூஜையில் ராஷ்மிகா செய்த விஷயங்கள் விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. மேலும், சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து லீக்கான ஒரு வீடியோவில் கூட, ராஷ்மிகாவை நாம் பார்த்தோம்.
இந்நிலையில், தற்போது வாரிசு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து கியூட்டான வீடியோ ஒன்றை ராஷ்மிகா வெளியிட்டுள்ளார். ஆனால், இது வாரிசு படத்தின் படப்பிடிப்பு தளம் என்று அவர் அந்த வீடியோவில் குறிப்பிடவில்லை.
இருந்தாலும், ரசிகர்கள் பலரும், இது வாரிசு படத்தின் படப்பிடிப்பு தளம் தான் என்று கூறி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
