ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா விரைவில் திருமணம்? சொத்து மதிப்பு குறித்து உலா வரும் தகவல்..
ராஷ்மிகா - விஜய்
நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா காதலித்து வருவதை ரசிகர்கள் அறிவார்கள். ஆனால், இதுகுறித்து இருவரும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

வருகிற பிப்ரவரி 26ஆம் தேதி உதய்பூரில் மிகவும் விமரிசையாக இவர்களுடைய திருமணம் நடைபெறவுள்ளது என கூறப்படுகிறது. தொடர்ந்து இவர்களுடைய திருமண செய்தி வெளிவரும் நிலையில், இரு தரப்பில் இருந்தும் எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சொத்து மதிப்பு
ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமண செய்திகள் ஒரு பக்கம் உலா வர, மறுபக்கம் இவர்களுடைய சொத்து மதிப்பு குறித்து தகவல்கள் உலா வருகின்றன.

இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனாவின் சொத்து மதிப்பு ரூ. 66 கோடி என்றும், நடிகர் விஜய் தேவரகொண்டாவின் சொத்து மதிப்பு ரூ. 50 முதல் ரூ. 70 கோடி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை.
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை - அரசியல் கட்சிகள் எதிர்ப்பது ஏன்? IBC Tamilnadu