நடிகை ராஷ்மிகா மந்தனா கையில் அணிந்திருக்கும் வாட்ச் விலை எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இவ்வளவா!!
ராஷ்மிகா மந்தனா
ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்துள்ள நடிகை ஆவார் ராஷ்மிகா மந்தனா. நேஷனல் கிரஷ் என ரசிகர்கள் இவரை அழைத்து வரும் நிலையில், இந்திய சினிமாவின் வசூல் நாயகியாகவும் மாறியுள்ளார்.

அனிமல், புஷ்பா 2, சாவா, தாமா என தொடர்ந்து வசூல் வேட்டை நடத்திய படங்களில் கதாநாயகியாக ராஷ்மிகா நடித்துள்ளார். கதாநாயகியாக மட்டுமின்றி சமீபத்தில் வெளிவந்த Girlfriend படத்தில் கதையின் நாயகியாகவும் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் தங்களது கையில் அணிந்திருக்கும் வாட்ச் விலை பல லட்சங்கள் அல்லது கோடிகளில் கூட இருக்கும். அதுகுறித்து தொடர்ந்து தகவல்கள் இணையத்தில் வெளியாவதை நாம் பார்த்து வருகிறோம்.
ராஷ்மிகாவின் வாட்ச்
அந்த வகையில் நடிகை ராஷ்மிகா மந்தனா தனது கையில் அணிந்திருக்கும் வாட்ச் விலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ராஷ்மிகா அணிந்திருக்கும் இந்த வாட்ச் விலை ரூ. 4.17 லட்சம் என கூறப்படுகிறது.
