நடிகை ரஷ்மிகாவை கிண்டலடிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள பேனர், வைரல் மீம்ஸ்
நடிகை ரஷ்மிகா தற்போது தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்குபவர், கன்னட திரையுலகின் மூலம் அறிமுகமான ரஷ்மிகா தொடர்ந்து இந்தியளவில் பிரபலமாகி வருகிறார்.
மேலும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ரஷ்மிகா, அங்கு பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து அசதி வருகிறார்.
அதுமட்டுமின்றி சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் ரஷ்மிகா தற்போது தமிழ் சினிமாவிற்கும் அறிமுகமாகி உள்ளார். இதன் மூலம் இவர் தமிழிலும் ஒரு பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில சலூன் கடைகளில் ரஷ்மிகாவின் புகைப்படத்திற்கு மொட்டை அடிக்கப்பட்டுள்ள பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.
