33 நாள் முடிவில் ராஷ்மிகாவின் சாவா படம் செய்துள்ள மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா?
ராஷ்மிகா மந்தனா
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அனிமல் மற்றும் புஷ்பா 2 போன்ற ஹிட் படங்கள் மூலம் ரூ. 1000 கோடி வசூல் படங்களை கொடுத்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.
இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் சாவா. மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி-சாயி பாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு இப்படம் ஹிந்தியில் உருவாகி இருந்தது.
இப்படத்தில் பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் மற்றும் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்திருந்தார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரூ. 130 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி இருந்தது.
சாவா படம் முதல் நாளில் இந்திய அளவில் மட்டும் ரூ. 33.1 கோடி வசூல் செய்ய உலக அளவில் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கும் என கூறப்பட்டது.
மொத்த வசூல்
இந்த படம் வெளியாகி இன்றுடன் 33 நாட்களை கடந்துள்ள நிலையில், இதுவரை இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 761 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், இந்தியாவில் மட்டும் ரூ. 560 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியதாக கூறப்படுகிறது.

7 அறைகள் முதல் உடற்பயிற்சி கூடம் வரை.., சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள வசதிகள் என்னென்ன? News Lankasri

HDFC வங்கி 5 வருட FD-ல் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
