இன்று பிறந்தநாள் கொண்டாடும் ராஷ்மிகாவின் சொத்து மதிப்பு, கார்கள், பங்களா பற்றி தெரியுமா?- முழு விவரம்
நடிகை ராஷ்மிகா மந்தனா
இந்திய சினிமா மொழிகளில் தொடர்ந்து படங்கள் நடித்து National Crush என்ற அடையாளத்தோடு சினிமாவில் வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.
2016ம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளிவந்த கிரிக் பார்ட்டி என்ற கன்னட படம் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் அடுத்தடுத்து தெலுங்கு மொழியில் படங்கள் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட் நாயகியாக வலம் வந்தார்.
கன்னடம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி என இவர் எந்த மொழியில் படம் நடித்தாலும் செம ஹிட் தான்.

சொத்து மதிப்பு
இன்று தனது 26வது பிறந்தநாளை கொண்டாடும் ராஷ்மிகாவின் சொத்து மதிப்பு விவரம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
சொத்து மதிப்பு ரூ. 65 கோடி வரை என்கின்றனர். மாதம் ரூ. 60 லட்சமும், வருடத்திற்கு ரூ. 8 கோடி வரை சம்பாதித்து வருகிறாராம்.
ஒரு படத்திற்கு அதிக பட்சமாக ரூ. 4 கோடி வரை சம்பளம் பெறுகிறாராம், விளம்பரங்களிலும் பல கோடிகள் வாங்கி வருகிறார்.
ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ள ராஷ்மிகா பெங்களூரில் சொந்தமாக ஒரு மேன்ஷன் வைத்துள்ளாராம். அதன் மதிப்பு ரூ. 8 கோடி என்கின்றனர்.
இதுதவிர மும்பையில் பிரம்மாண்ட பங்களா ஒன்றையும் சொந்தமாக வாங்கியிருக்கிறார்.
இவரிடம் தற்போது ரூ.50 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ், ரூ.40 லட்சம் மதிப்புள்ள ஆடி Q3, டொயோட்டா இன்னோவா மற்றும் ஹுண்டாய் கிரிட்டா போன்ற கார்கள் உள்ளன.

துபாயில் கோலாகலமாக நடந்த ராம் சரண், உபாசனாவின் வளைகாப்பு நிகழ்ச்சி- வெளிவந்த புகைப்படங்கள்