என் வலி, வேதனைகள்.. விஜய் தேவரகொண்டா குறித்து மௌனம் கலைத்த ராஷ்மிகா மந்தனா!
ராஷ்மிகா மந்தனா
ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்துள்ள நடிகை என்றால் அது ராஷ்மிகா மந்தனா. நேஷனல் கிரஷ் என ரசிகர்கள் இவரை அன்போடு அழைத்து வரும் நிலையில், இந்திய சினிமாவின் வசூல் நாயகியாகவும் மாறியுள்ளார்.
அனிமல், புஷ்பா 2, சாவா, தாமா என தொடர்ந்து வசூல் வேட்டை நடத்திய படங்களில் கதாநாயகியாக ராஷ்மிகா நடித்துள்ளார். கதாநாயகியாக மட்டுமின்றி சமீபத்தில் வெளிவந்த Girlfriend படத்தில் கதையின் நாயகியாகவும் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

ஓபன் டாக்!
இந்நிலையில், ராஷ்மிகா அவரது மகிழ்ச்சிக்கு காரணம் என்ன என்பது குறித்து பகிர்ந்துள்ளார்.
அதில், "என் வலி, வேதனைகள் எல்லாம் இப்போது மறைந்துவிட்டன. இப்போது சந்தோஷம், மகிழ்ச்சியான தருணங்கள் மட்டுமே உள்ளன.
அதற்கு எல்லாம் காரணம் விஜய் தேவரகொண்டா தான். தன் எல்லா வலிகளுக்கும் விஜய் மருந்து தடவியுள்ளார்" என்று ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.
