ராஷ்மிகா இத்தனை கோடி வருமான வரி கட்டுகிறாரா.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்
நடிகை ராஷ்மிகா தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது ஹிந்தியிலும் முன்னணி நடிகையாக மாறி இருக்கிறார். புஷ்பா, அனிமல் என தொடர்ந்து அவர் நடிக்கும் படங்கள் நாடு முழுக்க பெரிய ஹிட் ஆகின்றன.
அடுத்து கைவசம் ராஷ்மிகா ஏராளமான படங்கள் வைத்து இருக்கிறார். டாப் ஹீரோயினாக வலம் வரும் அவர் ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது.
சினிமா மட்டுமின்றி அவரது அப்பா மூலமாக சில தொழில்களிலும் ராஷ்மிகா முதலீடு செய்து வருவதாக கூறப்படுகிறது. வீடு, பங்களா, எஸ்டேட் என பலவற்றை அவர் வாங்கி குவித்து இருக்கிறார்.

வருமான வரி
2025-26 ஆண்டுக்கான வருமான வரியாக இதுவரை 4.69 கோடி ரூபாயை ராஷ்மிகா செலுத்தி இருக்கிறாராம். குடகு பகுதியில் அதிகம் வரி செலுத்தும் நபராக ராஷ்மிகா இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.
இன்னும் நிதி ஆண்டு முடிய மூன்று மாதங்கள் இருப்பதால் அவர் செலுத்தும் வருமான வரி இன்னும் அதிகரிக்கும் என தெரிகிறது.
