தொடர் தோல்வி படங்கள்.. 2 முக்கிய படங்களை இழந்த பூஜா ஹெக்டே!
பூஜா ஹெக்டே
நடிகை பூஜா ஹெக்டேவுக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் அவர் சமீப காலமாக நடிக்கும் படங்கள் தோல்வியை தான் சந்தித்து வருகின்றன.
ராதே ஷ்யாம், பீஸ்ட், ஆச்சார்யா, Kisi Ka Bhai Kisi Ki Jaan என அவர் நடித்த படங்கள் பெரிய தோல்வியை அடைந்த நிலையில் அவரை அடுத்து ஒப்பந்தம் செய்திருந்த படங்களில் இருந்து நீக்க தொடங்கி இருக்கின்றனர்.

நீக்கம்
மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில் இருந்து பூஜா ஹெக்டே வெளியேற்றப்பட்டு இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியாகி அவர் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது.
மேலும் பவன் கல்யாணின் Ustaad Bhagat Singh படத்தில் இருந்து பூஜா ஹெக்டே நீக்கப்பட்டு இருப்பதாகவும், அவருக்கு பதிலாக ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் ஆகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
ரஷ்மிகா ஏற்கனவே புஷ்பா 2, அனிமல் போன்ற படங்களை கைவசம் வைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யை வரைந்த பிக் பாஸ் நடிகை சனம் ஷெட்டி! வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து