இதனால் தான் Englishல பேசுறதில்லை.. உஷாராக இருக்கும் நடிகை ராஷ்மிகா!

By Parthiban.A May 29, 2024 09:30 PM GMT
Report

நடிகை ராஷ்மிகா நேஷ்னல் கிரஷ் என சொல்லும் அளவுக்கு அதிக அளவு ரசிகர்களை ஈர்த்த நடிகையாக வலம் வருகிறார். இந்தியா முழுக்க அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ராஷ்மிகா அதிகமாக தெலுங்கு படங்களில் தான் நடிக்கிறார். குறிப்பாக அவர் நடிக்கும் புஷ்பா 2 மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அதில் அவரது டான்ஸ் வீடியோவும் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது.

இதனால் தான் Englishல பேசுறதில்லை.. உஷாராக இருக்கும் நடிகை ராஷ்மிகா! | Rashmika Reveal Reason Dont Talk In English

ஆங்கிலத்தில் ஏன் பேசுவதில்லை

ராஷ்மிகா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசும்போது ஆங்கிலத்தில் பேசினால் எல்லோருக்கும் புரியும் என ரசிகர் ஒருவர் ட்விட்டரில் கமெண்ட் செய்து இருக்கிறார்.

அதற்கு பதில் அளித்த ராஷ்மிகா, "ஆங்கிலத்தில் பேச முயற்சிக்கிறேன். ஆனால் நான் அவர்களது மொழியில் பேசவில்லை என்றால், மொழியை அவமானப்படுத்திவிட்டதாக அவர்கள் நினைப்பார்கள். அல்லது மொழியே தெரியாமல் நடித்தேன் என விமர்சிப்பார்கள்."

"அதனால் நான் ஆங்கிலத்தில் பேசாமல் மற்ற மொழிகளிலேயே பேசுகிறேன்" என ராஷ்மிகா கூறி இருக்கிறார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US