வாரிசு ரிலீஸ் தேதி 'ஜனவரி 12' இல்லை, இதுதான்.. தேதியை சொன்ன ராஷ்மிகா
வாரிசு படத்தின் ரிலீசுக்காக தான் விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள்.
வாரிசு
வாரிசு படத்தில் விஜய் உடன் ஷாம், ஸ்ரீகாந்த், பிரகாஷ்ராஜ், சரத்குமார், ராதிகா, குஷ்பு உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர்.
வாரிசு படத்தின் சென்சார் பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில் ரிலீஸ் தேதியை படக்குழு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. அதே போல வாரிசு உடன் மோதும் துணிவு படத்தின் ரிலீஸ் தேதியும் இன்னும் அறிவிக்கப்படாமல் தான் இருக்கிறது.

ரிலீஸ் தேதியை சொன்ன ராஷ்மிகா
இந்நிலையில் வாரிசு படத்தின் ஹீரோயின் ராஷ்மிகா இன்ஸ்டா லைவ்வில் ரசிகர்களுடன் சற்று முன்பு உரையாடினார். வாரிசு ரிலீசுக்கு இன்னும் இரண்டு தினங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அவர் super exciting ஆக இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
வாரிசு படம் ஜனவரி 11ம் தேதி ரிலீஸ் ஆகிறது, அது உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன் எனவும் கூறி இருக்கிறார்.
வீடியோ இதோ..
அஜித்தின் துணிவு பட டிரைலர் எவ்வளவு மாஸாக இருக்கிறது தெரியுமா?- சூப்பர் டுவிட்