200 பேர் முன்னிலையில் பிரபல நடிகருடன் முதல் முத்தம்.. அனுபவத்தை பகிர்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா
திரையுலக நட்சத்திரங்கள் தங்களது திரைப்பட அனுபவத்தை பேட்டிகளில் அவ்வப்போது பகிர்வார்கள். அந்த வகையில், சினிமாவில் தனது முதல் முத்தம் குறித்து பேட்டி ஒன்றில் நடிகை ராஷ்மிகா மந்தனா பகிர்ந்துள்ளார்.

முதல் முத்தம்
"என் சினிமா வாழ்க்கையில் நான் கொடுத்த முதல் முத்தம் 'கீதா கோவிந்தம்' படத்தில்தான். அது படத்திற்கு தேவை, சக நடிகருக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்றபோது இயல்பாகவே என் மனதில் குழப்பம் ஏற்பட்டது. அதேபோல் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் இருந்ததாக பிறகு நான் தெரிந்துகொண்டேன்".

"ஆனால், நாங்கள் கலைஞர்களாக படத்துக்கு தேவையான அனைத்து காட்சிகளிலும் பங்களிப்பை கொடுக்க வேண்டும். அது எங்கள் தொழில்முறைக்கும், சினிமா மீதான அர்பணிப்புக்கும் அவசியம். கதைக்கு தேவைப்படும்போது முத்த காட்சியை ஏற்று நடிப்பது நடிப்பின் ஒரு பகுதியாகும். கதைக்கு தேவைப்பட்டால் மட்டுமே இயக்குநர்கள் அத்தகைய காட்சிகளை படமாக்குவார்கள். அதிலும், கீதா கோவிந்தம் படத்தில் நானும் விஜய் தேவரகொண்டாவும் நடித்தது திருமணமான தம்பதிகளாக. திருமணமான கணவன் - மனைவி செய்யும் அனைத்தையும் நாங்கள் சினிமாவில் செய்ய வேண்டும். அது இயல்புதான்".
மிகவும் கடினமாக இருந்தது
"ஆனால், கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் முத்தக்காட்சி எடுத்தபோது நான் மிகவும் பதட்டமாக இருந்தேன். ஏனென்றால், எண்னை பொறுத்தவரை முத்தம் என்பது மிகவும் தனிப்பட்ட மற்றும் உணர்வுபூர்வமான விஷயம் ஆகும். அதனால் இயல்பாகவே எனக்கு மிகவும் கவலை ஏற்பட்டது. அதிலும் படப்பிடிப்பு தளத்தில் 200க்கும் மேற்பட்டோர் இருப்பார்கள். அவர்கள் முன்னிலையில் முத்தம் கொடுப்பது மிகவும் கடினமாக இருந்தது என்பது பொய்யல்ல" என கூறியுள்ளார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. சமீபத்தில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக கூறப்படும் நிலையில், 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவர்களுக்கு திருமணம் என்கின்றனர். ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.