தென்னிந்திய சினிமாவை அவமானப்படுத்திய நடிகை ராஷ்மிகா.. வெளுத்து வாங்கும் ரசிகர்கள்
ராஷ்மிகா மந்தனா
இந்தியளவில் தற்போது பிரபலமான நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா. இவர் நடிப்பில் வாரிசு திரைப்படம் தமிழில் வெளியாகவுள்ளது.
தமிழ், தெலுங்கு மட்டுமின்றி தற்போது ஹிந்தியிலும் பிஸியான நடிகையாக மாறியுள்ளார்.
சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் உருவாகியுள்ள மிஷன் மஞ்சு படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
அவமானப்படுத்திய ராஷ்மிகா
இந்நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ராஷ்மிகா, பாலிவுட் மற்றும் தென்னிந்திய பாடல்கள் குறித்து பேசினார்.
இதில் ' தென்னிந்திய சினிமாவில் ஐட்டம் பாடல்களும், குத்து பாடல்களும் மட்டுமே பிரபலமாக இருக்கிறது. ஆனால், பாலிவுட்டில் தான் நல்ல ரொமான்டிக் பாடல்கள் உள்ளது என கூறியுள்ளார்.
ராஷ்மிகா இப்படி பேசியுள்ளது தென்னிந்திய சினிமா ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது. தென்னிந்திய சினிமாவை அவமானப்படுத்தும் வகையில் ராஷ்மிகா எப்படி பேசலாம் என்று ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகிறார்கள்.
After #RashmikaMandanna Got Chance To Act In Bollywood, Now She Is Blaming And Downgrading Our South Industry! She Did The Same Thing To #Kannada Industry When She Got Offer In #TFI. What An Woman??
— Box Office - South India (@BoSouthIndia) December 28, 2022
Moral: Once A Cheater, Always A Cheater!#Yash19 #Kichcha46 #Salaar #RRR2 pic.twitter.com/tCqzARPR7X