நடிகை சௌந்தர்யாவின் பயோபிக்கில் நடிக்க ஆசைப்படும் இளம் சென்சேஷன் நடிகை.. யார் தெரியுமா
தமிழில் 1993ஆம் ஆண்டு வெளிவந்த 'பொன்னுமணி' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சௌந்தர்யா.
இதன்பின் அருணாச்சலம், காதலா காதலா, படையப்பா, தவசி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின், முக்கிய படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் கடந்த 2004ஆம் ஆண்டு விமான விபத்தில் சிக்கி மரணமடைந்தார் அவரது பயோபிக்கில் நடிக்க வேண்டுமென ராஷ்மிகா மந்தனா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
" சிறு வயதிலிருந்தே என்னை பார்த்து சவுந்தர்யா போல இருப்பதாக அப்பா சொல்வார். அதனால், அவர் மீது எனக்கு சிறு வயது முதலே அதிக ப்ரியம் உண்டு. அவரது பயோபிக்கில் நடிக்க வேண்டுமென்ற ஆசை உள்ளது " என்று தெரிவித்திருக்கிறார்.
சமீபகாலமாக திரையுலகில் மிகப்பெரிய ஆளுமையாக இருந்த நட்சத்திரங்களின் வாழ்க்கை வரலாறு படங்கள் வெளியாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.