ராஷ்மிகாவின் அடுத்த படம் இவருடனா.. ரொமான்ஸ் வேற லெவலில் இருக்குமே
நடிகை ராஷ்மிகா தான் தற்போது இந்திய சினிமாவில் மோஸ்ட் வான்டட் ஹீரோயின். அவர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து 1000 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வருகின்றன.
அடுத்து அவர் தனுஷின் குபேரா, Thama, The Girlfriend போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
அடுத்த படம்
ராஷ்மிகா தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் காதலில் இருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். அவர்கள் ஜோடியாக வெளிநாடுகளுக்கும் ட்ரிப் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் ஆறு வருடங்களுக்கு பிறகு அவர்கள் இருவரும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க இருக்கின்றனர். விஜய் தேவரகொண்டாவின் VD14 படத்தில் தான் ராஷ்மிகா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நிஜ ஜோடி திரையிலும் ஜோடியாக நடிப்பதால் ரொமான்ஸ் வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.