தளபதி 66 ஹீரோயின் இவரா! இளம் நடிகைக்கு அடித்த ஜாக்பாட்
விஜய்யின் அடுத்த படத்தில் ராஷ்மிகா ஹீரோயினாக நடிக்கிறார் என உறுதியான தகவல் வெளியாகி இருக்கிறது.
தளபதி66 பூஜை தேதி
பீஸ்ட் படத்தில் நடித்து முடித்திருக்கும் விஜய் அடுத்து தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிக்கிறார். தில் ராஜு தயாரிக்கும் அந்த படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் 2ம் தேதி யுகாதி அன்று பூஜை உடன் தொடங்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
படத்தின் தலைப்பு அதே தேதியில் வெளியிடப்படுமா அல்லது பின்னர் வெளியிடப்படுமா என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

ராஷ்மிகா தான் ஹீரோயின்
மேலும் படத்தின் ஹீரோயின் யார் என்பது பற்றியும் சில தகவல் வெளியாகி இருக்கிறது. ராஷ்மிகா தான் விஜய்க்கு ஜோடியாக நடிக்க போகிறார். அவர் நடித்த புஷ்பா படம் பெரிய ஹிட் ஆன நிலையில் தற்போது தமிழில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.
விஜய் உடன் நடிக்க வேண்டும் என ட்விட்டர், பேட்டிகள் என பலமுறை ராஷ்மிகா வெளிப்படையாகவே கூறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரது ஆசை நிறைவேறி இருக்கிறது.

டிவி ஷோவில் சண்டை போட்டுக்கொண்ட சூரி - புகழ்! என்ன தான் நடந்தது?