அவரை நிச்சயம் டேட்டிங் செய்வேன் என சொன்ன ராஷ்மிகா.. வறுத்தெடுத்த நெட்டிசன்கள்
நடிகை ராஷ்மிகா நேஷ்னல் கிரஷ் என சொல்லும் அளவுக்கு இந்திய அளவில் பிரபலமான நடிகை. அவருக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது. அவர் நடிக்கும் படங்கள் 1000 கோடிக்கும் மேல் வசூலிப்பது பற்றியும் பலரும் ஆச்சர்யமாக பேசுகிறார்கள்.
பல ஹீரோக்கள் கூட செய்ய முடியாததை ராஷ்மிகா செய்கிறார் என நடிகர் நாகார்ஜூனா சமீபத்தில் ஒரு பட விழாவில் 1000 கோடி விஷயத்தை கூறி பாராட்டி இருந்தார்.
இப்படி டாப்பில் இருக்கும் ராஷ்மிகா அவ்வப்போது பேட்டிகளில் எதாவது பேசி அடிக்கடி சர்ச்சைகளில் கூட சிக்கிக்கொள்கிறார்.
அவரை டேட்டிங் செய்வேன்
அனிமல் படத்தில் வரும் ரன்பீர் கபூர் காதாபாத்திரத்தை போன்ற ஒருவரை டேட்டிங் செய்வீர்களா என ஒரு நிகழ்ச்சியில் கேட்டதற்கு "நிச்சயம் டேட்டிங் செய்வேன். நீங்கள் ஒருவரை உண்மையாக காதலித்தால், அவர்களும் உங்களை காதலித்தால், நிச்சயம் மாற்றம் வரும்."
ராஷ்மிகா இவ்வாறு பேசி இருப்பதற்கு நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.
அனிமல் படம் வந்தபோது ரன்பீர் கதாபாத்திரம் toxic ஆனது என ட்ரோல்கள் வந்தது. அதே காரணத்திற்காக தான் ராஷ்மிகா பேச்சுக்கு தற்போது ட்ரோல்கள் வருகிறது.

திருவாரூர் அருகே டீசல் கொண்டு சென்ற சரக்கு ரயிலில் பெரும் தீ விபத்து - ரயில்சேவைகள் பாதிப்பு IBC Tamilnadu
